Header Ads

உலக எயிட்ஸ் தினம் டிசம்பர் - 1 - 2010


மனித நாகரீகத்தில் மனிதன் முதிர்ச்சி பெற்றாலும்அவனால் சில நடவடிக்கைகளை விடாமல்இருக்க முடியாதுள்ளது. இதனால் இவன் பெற்றுக்கொள்ளும் இன்பங்களும், துன்பங்களும் சந்தர்ப்பங்களைப் பொறுத்து மாறுபட்டுக் காணப்படுவது தான் இங்கு விசேடஅம்சமாகும்.

மனிதன்தோன்றிய காலம் தொட்டு இந்தபாலியல் நோய் இருந்து வந்தாலும்ஆனால் அது அடையாளம் காணப்படவில்லைஎன்பதும் ஒரு விசித்திரம். அவன்உலகில் தோன்றிய காலம் தொடக்கம்இறைவனால் பல வகையான அறிவுரைகள்காலத்திற்கு காலம் வழங்கப்பட்டும் உள்ளன. இதற்கான அறிவுரையும் அடங்கி இருப்பதாக இஸ்லாமியசமயம் கூறுகின்றது. அதில் இந்த வகையானநோயும் ஒன்றாகும்.

மேலும்ஒரு விடயத்தை சொல்ல வேண்டும். இதனைஒழிப்பது என்பது யாராலும் முடியாதகாரியம். ஆனால் அதனைக் குறைக்கமுடியும் என்பது தான் கண்டுகொண்ட உண்மையாகும்.

மனிதனினால்தீர்க்கப்படாத பிரச்சினையில்  இந்நோயும் ஒன்றாம். காரணம் இந்த நோயின்அறிகுறி பல்வேறு கோலத்தில் உருவெடுப்பதால்அவனால் இதனை சரியான முறையில்அடையாளம் கண்டு அதற்கான மருந்தினைவழங்குவதில் இந்த மருத்துவ உலகிற்கேபாரிய சவாலாக விளங்குகின்றது.

உலகெங்கும்33.4 மில்லியன் மக்கள் எயிட்ஸ் நோயால்பாதிக்கப்பட்டிருக்கின்றனர். எயிட்ஸ் தற்பொழுது பரவல் தொற்று நோயாகும். இதுவரை இந்நோயால் 330,000 குழந்தைகள் உட்பட 2.1 மில்லியன் மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். பாதுகாப்பற்ற உடலுறவின்மூலம் பொதுவாகப் பரவி வரும் இத்தொற்றுநோய் மேலும் பரவாமல் தடுக்கவும்மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் என உலகம் முழுவதும்டிசம்பர் 1ம் திகதி எயிட்ஸ்தினமாக அனுட்டிக்கப்பட்டு வருகிறது.

இதேவேளைஇந்நிறுவனங்கள் கலந்து கொண்டு முடிவுகளைஎடுக்கும் சர்வதேச எயிட்ஸ் மாநாடுஇவ்வருடம் தென்னாபிரிக்காவின் தலைநகரான கேப்டவுனில் ஜூலை மாதம் இடம்பெற்றது. 2011ம் ஆண்டு வியன்னாவிலும் 2012ம்ஆண்டு அமெரிக்காவின் வாசிங்டன் நகரிலும் சர்வதேச எயிட்ஸ் மாநாடுநடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


 
செப். 20, 2010. சஹாராவை அடுத்த 22 ஆப்ரிக்க நாடுகளில் HIV கிருமிகள் மற்றும் AIDS நோயை புதிதாகப் பெறுபவர்களின்எண்ணிக்கை கடந்த எட்டு ஆண்டுகளில்25 வீதம்  குறைந்துள்ளதாகஎயிட்ஸ் நோய் கட்டுப்பாட்டிற்கான .நா. அமைப்பான UNAIDS அறிவித்தது.

எயிட்ஸ்அதிகமாகப் பரவி வந்த ஆபிரிக்கநாடுகளில் தற்போது குறிப்பிடத்தக்க வகையில்பரவலின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது, தடுப்பு நடவடிக்கைகளின் வெற்றியேஎனவும் இந்த .நா. அமைப்பு அறிவித்துள்ளது.

ஐவரி கோஸ்ட், எத்தியோப்பியா, நைஜீரியா, தென் ஆப்ரிக்கா, ஜாம்பியா மற்றும் ஜிம்பாப்வே நாடுகளில்அண்மைக் காலங்களில் எயிட்ஸ் நோய் பெருமளவில்கட்டுப்படுத்தப்பட்டுள்ளதுகுறிப்பிடத்தக்கது.

HIV/AIDS  பற்றிய அறிவை புதுப்பித்து கொள்வோம்
§    இந்நோய் (மனித பெற்ற நீர்ப்பீடணகுறைபாட்டுச் சிக்கல்) HIV வைரஸ் (மனித நீர்ப்பீடணகுறைபாட்டு வைரஸ் தொற்றினால் ஏற்படுகிறது)
§    HIV தொற்றுஏற்பட்ட பின் நோய் அறிகுறிகள்தென்படுவதற்கு 8 – 10 வருடங்கள் போகும். ஆனால் இந்தக்காலப்பகுதியில்ஒருவரில் இருந்து இன்னொருவருக்கு நோய்தொற்றலாம்.
§    மருந்துகளினால்தொற்றைக் கட்டுப்படுத்தலாம். ஆனால் முற்றாக குணப்படுத்தமுடியாது
§    நீங்கள்HIV பற்றிய புரண அறிவை பெற்றிருந்தால், HIV தொற்றிலிருந்து  உங்களையும்காப்பற்றலாம்.
§    எவ்வாறுகடத்தப்படுகிறது
§    பாதுகாப்பற்றஊடுருவும் வகையிலான உடலுறவு
§    குருதியேற்றலின்போது தொற்றடைந்த குருதியைப் பெறல் அல்லது உறுப்புமாற்றத்தின் போது தொற்றடைந்து குருதிப்பொருள்களைப் பெறல்.
§    தோற்றடைந்தஊசிகளையும் புகுத்திகளையும் தோலை துழைக்கும் ஏனையஉபகரணங்களையும் பகிர்ந்து பயன்படுத்தல்.
§    HIV தொற்றடைந்ததாயிடமிருந்து தாய்ப்பாலுட்டுதல்,

HIV/AIDS  பின்வருவனவற்றால் கடத்தப்பட மாட்டாது
§    கட்டித்தழுவுதல்.
§    முத்தமிடல்.
§    கை குலுக்குதல்.
§    உண்ணும் பருகும் பாத்திரங்களை பகிர்ந்து பயன்படுத்துதல்.
§    நுளம்புக்கடி, ஏனைய புச்சிக்கடிகள்.
§    ஒரே தடாகத்தில் நீந்துதல்.
§    மல, சல கூட ஆசனங்களை பகிர்ந்த பகிர்நதளித்தல்.
இதனை எவ்வாறு தவிர்க்கலாம்
§   பாதுகாப்பற்றஉடலுறவைத் தவிர்த்தல்.
§   பாலுறவில்ஒரே துணைக்கு நம்பிக்கையாக இருத்தல்.
§   ஆணுறைகளைசரியாகப் பயன்படுத்துதல்
§   பாலியல்மூலம் கடத்தப்படும் நோய்களுக்கு சீராக சிகிச்சை பெறல்.





கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.